![போருக்கே போகாமல் பட்டம் இப்போ யாருக்கு.? தலைவலியான தளபதி! 1 - Dhinasari Tamil vijay thalapathi - Dhinasari Tamil](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2022/03/e0aeaae0af8be0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af87-e0aeaae0af8be0ae95e0aebee0aeaee0aeb2e0af8d-e0aeaae0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d.jpg?resize=640%2C271&ssl=1)

விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட அரசியல் சார்ந்த போஸ்டரால் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் மதுரையில் அரசியல் சார்ந்த போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
![போருக்கே போகாமல் பட்டம் இப்போ யாருக்கு.? தலைவலியான தளபதி! 2 - Dhinasari Tamil vijay - Dhinasari Tamil](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2022/03/e0aeaae0af8be0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af87-e0aeaae0af8be0ae95e0aebee0aeaee0aeb2e0af8d-e0aeaae0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d-1.jpg?resize=640%2C297&ssl=1)

அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, முடிவெடுத்தால் முதல்வர் தான். 2021-ல் மு.க.ஸ்டாலின் அவர்களை தளபதி என குறிப்பிட்டும் 2026 ஆம் வருடத்தில் நடிகர் விஜய் தான் தளபதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மேலும் அதில் 2026-ஆம் வருடம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தளபதி மக்கள் இயக்க வேட்பாளர் விஜய்தான் என்றும் அவரின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் எனவும் குறிப்பிட்டு அவர்களின் போட்டோக்களை போட்டிருக்கின்றனர்.
இது தற்போது அங்கு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.