[prisna-google-website-translator]

அஜித் பற்றி அஜித்தின் சகோதரர் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள்!


ajith 8 - Dhinasari Tamilajith 8 - Dhinasari Tamil

நடிகர் அஜித்துக்கு அனில்குமார் என்கிற சகோதரர் இருக்கிறார். இவர் தனது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் அஜித் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்

ajith bro anil - Dhinasari Tamilajith bro anil - Dhinasari Tamil

தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் நடிக்க வந்த நடிக்க வந்த நடிகர் அஜித், பல்வேறு தடைகளைக் கடந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகனாக உயர்ந்துள்ளார்.

ajith fmy 1 - Dhinasari Tamilajith fmy 1 - Dhinasari Tamil

மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த அஜித், மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர். அதனால் இவரைப் பற்றி யாரேனும் பேசினாலே அது வைரல் ஆகி விடும்.

ajith mom - Dhinasari Tamilajith mom - Dhinasari Tamil

நடிகர் அஜித்துக்கு அனில்குமார் என்கிற சகோதரர் இருக்கிறார். சொந்தமாக தொழில் செய்துவரும் இவர், அஜித்தை போலவே மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்து வருகிறார்.

ajith fmly - Dhinasari Tamilajith fmly - Dhinasari Tamil

இவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் அஜித் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அப்பா தமிழன் என்றும் அம்மா சிந்தி எனவும் கூறினார். தனது தாய் கராச்சியில் வசித்து வந்ததாகவும் பிரிவினையின்போது அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.

ajith fmy - Dhinasari Tamilajith fmy - Dhinasari Tamil

இதையடுத்து கொல்கத்தாவில் இருவருக்கு திருமணம் ஆனதாகவும், தந்தைக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைத்ததன் காரணமாக கான்பூர், லக்னோ, ஐதராபாத் என பல்வேறு இடங்களில் வசித்து வந்ததாகவும், இறுதியில் தமிழ்நாடு வந்து இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் கூறினார்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply