ஏகே: அடுத்து வெளியான கலக்கல் புகைப்படம்!


ajith 3 - Dhinasari Tamilajith 3 - Dhinasari Tamil

நடிகர் அஜித் “வலிமை” படத்திற்கு பின்னர் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள AK 61 படத்தில் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

மேலும் இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து நடிகர் அஜித்குமார் செம ஃபிட்டா காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படம் ஏகே 61 படத்திற்காக அஜித் உடல் எடையை குறைப்பதாக வெளியான தகவலை உறுதி செய்யும் வகையில் அல்டிமேட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

AK 61 படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply