பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!


mohan - Dhinasari Tamilmohan - Dhinasari Tamil

கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மோகன் ஜுனேஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

அண்மையில்; யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் 2-ம் பாகத்திலும் சிறிய வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் மோகன் ஜூனேஜா.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக வடாரா என்கிற சீரியல் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் ஜூனேஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply