புழ முதல் புழ வரே படத்திற்கு தனிக்கைத் துறை விதித்திருந்த தடையை அகற்றியது கேரள உயர் நீதிமன்றம்.
1921 மாப்ளா படுகொலைகள், வன்செயல் கள் மதமாற்றங்கள் போன்றவற்றை தகுந்த ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படை யில் தயாரித்து இயக்கியுள்ளார் ராம சிம்ஹன் (அக்பர் அலி).
திரைப்பட தணிக்கைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மார்க்ஸிஸ்ட் மற்றும் மதசார்பற்றவாதிகளும் இப்படத்திற்கு அனுமதிச் சான்றிதழ் வழங்கிடாமல் தடை செய்து இருந்தனர்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அத்தடையை அகற்றியுள்ளது.
படத்தின் இயக்குனர் ராம சிம்ஹன் அண்மையில் இந்துவாக தாய்மதம் தழுவியவர். இஸ்லாமியராக இருந்த போது அக்பர் அலி என்று அழைக்கப்பட்டார்.