லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..


images 51 3 - Dhinasari Tamil

திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர் விஷ்னு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. அப்போது பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அலுவலகத்தில் உள்ள இ – சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல இயலாத வகையில் சுற்றி கயிறு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

‘லால் சலாம்’ என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News


Comments

Leave a Reply

%d bloggers like this: