மாஸ் காட்டும் மாஸ்டர் டீசர் வீடியோ – விஜய் ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளி பரிசு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.

எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். இதைத்தொடர்ந்து, அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தீபாவளி நாளான நேற்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர் வீடியோ வெளியானது. பல மாதங்களாக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த டீசர் சிறப்பான விருந்தாக அமைந்துள்ளது.

[embedded content]

Leave a Reply