சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில், நடிகர் வடிவேலு இப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ள வடிவேலு ‘தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்’ என நெகிழ்ந்துள்ளார்.

 

Leave a Reply

Trending