காதல் திருமணம்.. இல்லையேல் சிங்கிளாகவே இருப்பேன்.. திரிஷா அதிர்ச்சி பேட்டி…

தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக நடித்து வருபவர் நடிகரி திரிஷா. இடையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்தார். ஆனால், சில காரணங்களால் அவரை பிரிந்தார். அதேபோல், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்தார்.

அதன்பின் கடந்த சில வருடங்களாக அவரின் திருமணம் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், திருமணம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் முன்பே கூறியது போல் காதல் திருமணமே செய்து கொள்வேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவராக அவர் இருக்க வேண்டும். அப்படி ஒருவர் கிடைத்தால் மட்டுமே திருமணம் செய்வேன். இல்லையேல் சிங்கிளாகவே இருந்து விடுவேன். அதை பற்றி எனக்கு கவலையே இல்லை’ என அவர் தெரிவித்தார்.

Leave a Reply