உன்ன பாராட்ட முடியாது!- சூர்யாவை அறிமுகப்படுத்திய வசந்த் எழுதிய கடிதம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சூரரைப்போற்று திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சூர்யா தனது தோளில் சுமந்திருப்பதாக புகழாராம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேருக்கு நேர் படத்தில் சூர்யாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த் இப்படத்தை பாராட்டி சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘இந்த பாராட்டு கடிதம் உனக்கு இல்லை. நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. ஒவ்வொரு பிரேமிலும் உன் ஆட்சிதான். உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய். உன்னை அறிமுகப்படுத்தியது நான் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை செதுக்கி வருகிறாய். இதற்கு முன்பே நீ திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இது உன் உச்சம். ஒரு காட்சியில் கூட உன் முகத்தில் சிரிப்புஇல்லை. எவ்வளவு இயல்பாக, தீவிரமாக நடித்திருக்கிறாய். ஹேட்ஸ் ஆப் டூ யூ மை டியர் சூர்யா. என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருக்க முடியும்.ஏனெனில் நீ என் விதை. நீ என் விருட்ம்’ என எழுதியுள்ளார்.

suriya


Comments

Leave a Reply

%d bloggers like this: