மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆகவுள்ளார். அவர் விடுதலை ஆனால் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவரின் வரவு அதிமுகவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனவும், அதிமுகவில் குறிப்பிட்ட சதவீதம் பேர் அவர் பக்கம் செல்வார்கள் எனவும் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது சசிகலாவின் விடுதலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பழனிச்சாமி ‘அவரின் வரவால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை’ என பதிலளித்தார்.
அதாவது ஆட்சியும், கட்சியும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற நம்பிக்கை அவரின் பேச்சில் தெரிந்தாது. ஆனாலும், சசிகலா விடுதலை ஆகி வந்தபின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.