குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. 

மேலும், அதே வேகத்தில் பல மாதங்களாக கிடப்பில் கிடந்த ‘மாநாடு’ படத்திலும் நடிக்கப் போய்விட்டார். இது சிம்பு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஒருபக்கம், மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்களிடையே நிலவி வருகிகிறது.

இந்நிலையில், நாளை காலை 9:9 மணிக்கு மாநாடு தொடர்பான சிறப்பு அப்டேட் வெளியாகும் என மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு டிவிட் செய்துள்ளார். கண்டிப்பாக இது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான அப்டேட்டாகத்தான் இருக்கும் என சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Trending