இது புதுசா இருக்கே…பாராதிராஜாவுக்கு சிம்பு யார் தெரியுமா?…ஈஸ்வரன் அப்டேட்..

simbu

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 

இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.

மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக மாநாடு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் சிம்பு. இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பாரதிராஜா தத்து எடுத்து வளர்க்கும் பிள்ளையாக சிம்பு நடித்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Comments

Leave a Reply

%d bloggers like this: