விக்ரம் -ஹரி கூட்டணியில் இணையும் பிரபல நடிகை…அவர் காட்டுல மழைதான்..

hari

hari

தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க ஹரியின் மச்சான் மற்றும் நடிகர் அருண்விஜயை வைத்து அதே கதையை ஹரி இயக்குவதாக செய்தி வெளியானது. ஆனால், அது உறுதிசெய்யப்படவில்லை.

raashi khanna

இந்நிலையில், ஹரிக்கு கை கொடுக்க விக்ரம் வந்துள்ளார். ஏற்கனவே சாமி, அருள் என 2 படங்களில் இருவரும் இணைந்துள்ளனர். இந்த புதிய படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ராஷி கண்ணா தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply