ஹனிமூன் கொண்டாட இத விட பெஸ்ட் இடம் இல்ல… காஜல் அகர்வாலின் வைரல் புகைப்படம்….

kajal

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ், விஷால்,ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அதன்பின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். புதிய வீட்டிக்கு குடி பெயர்ந்தது, மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றது ஒன்றை கூட அவர் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில், மாலத்தீவில் முராகா எனும் இடத்தில் கடலுக்கு கீழே அறை இருப்பது போல் உருவாக்கப்பட்ட இடத்தில் ஹனிமூனை அவர் கொண்டாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply