காதலி கர்ப்பமான நிலையில் அவரை விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த கிறிஸ்தவ மதபோதகர்
தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் அபிராமி (வயது 21).
இவர் நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார் .
அந்த மனுவில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது மற்றொரு பெண்ணுடன் இன்று திருமணம் செய்ய உள்ளார்
ஆகவே, இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் சொல்லியிருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி மகேஸ்வரன் கட்டளையிட்டார் .
அதனைத் தொடா்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு நேற்று இரவு அந்த மத போதகர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு இருந்த அவரின் பெற்றோர் ராபர்ட் வீட்டில் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்
. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினார்கள்
பின்னர் ராபர்ட்டின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணிற்கும் தங்கள் மகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் இந்த பெண் பொய் சொல்கிறார் என கூறி வாக்குவாதத்தில் இறங்கினார்கள்
அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் மதபோதகர் ராபர்ட்டை குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அபிராமியை ராபர்ட் காதலித்ததும் அந்தப் பெண்ணுடன் அவர் சுற்றி திரிவதை பலமுறை பார்த்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்
அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ராபர்ட் எங்கு உள்ளார்? அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை போலீசார் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து உள்ளனர்.
இதனை அடுத்து இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த தஞ்சை ஆற்றுப்பாலம் மானம்புச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரித்தபோது மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரிய வந்தது.
அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அவரை வலைவீசி தேடி வருகிறார்கள் .