[prisna-google-website-translator]

விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!

KK - 1

கைதி – KAITHI – காவலன் …

முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பாடர்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் .

அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன் வெற்றிப்பயணத்தை தொடரும் சில இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாநகரம் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் . ( அடுத்த படத்தில் விஜய்யுடன் இதே பயணத்தை தொடர முடியுமா என்பது சந்தேகமே! ) …

KK - 2

பொது மக்களை காப்பாற்றும் காவலர்களை போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து  ஒரு கைதி காப்பற்றுவதே கதை . 

பத்து வருட தண்டனைக்கு பிறகு தனது மகளை பார்க்க பரோலில் வெளியே வரும் டில்லி ( கார்த்தி ) , பல நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மடக்கியிருக்கும் பிஜாய் & கோ ( நரேன் ) வையும் , போலீஸ்காரர் நெப்போலியன் ( மரியான் ) உதவியுடன் கமிசனர்  ஆஃபீசில் அடைபட்டிருக்கும் மாணவர் களையும்  அடைக்கலராஜின் ( ஹரிஷ் உத்தமன் ) மாஃபியா கேங்கிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முதல் பாதி த்ரில்லிங் திரைக்கதையாலும் , இரண்டாம் பாதி  ஹீரோயிச ஆக்ஸன்களாலும் விறுவிறுவென சொல்லி முடிக்கிறது படம் …

சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்த தேவ் அட்டர் ஃப்ளாப்பான பிறகு ரஃப் & டஃ ப் பருத்திவீரன் ரூட்டுக்கு திரும்பி யிருக்கும் கார்த்தி க்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறது .

சிறிய  தாமதத்திற்கு பிறகு அறிமுகமானாலும் வந்ததிலிருந்து  கவனம் முழுவதையும் தன் மேல் திரும்ப வைக்கிறார் . ஐஜி வீட்டில் நடக்கும் அமளிதுமளியை கண்டுகொள்ளாமல் வாளி  பிரியாணியை முழுங்குவது , ” பத்து வருஷம் உள்ள இருந்தேன்னு தெரியும் ஆனா என்ன பண்ணிட்டு உள்ள போனேன்னு தெரியாதுல்ல சார் ” என்று நரேனை பார்த்து சொல்வது , ஒரே டேக்கில் தனது தனது ஃப்ளாஸ்பேக்கை சொல்லி முடிப்பது , தன் மகளை பார்த்தவுடன் மருகுவது என கார்த்தி பல நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் …

KAITHI - 3

முகமூடி க்கு பிறகு நரேனுக்கு நல்ல ரோல் . கையருந்த நிலையில் கைதியின் உதவியுடன் சக காவலர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாக பெர் ஃபெக்டராக இருக்கிறது அவர் நடிப்பு

 ரமணா இத்தனை வருடங்கள்  அப்படியே இருப்பது ஆச்சர்யம் , கார்த்தியோடு ஒரு ஃபைட் வைத்து அவர் கதையை முடித்து விடுகிறார்கள் . ஐயா ஐயா என்று ஃபோனில் விறைப்பாக பேசும் மரியான்  நடிப்பால் நிமிர வைக்கிறார் .

சிறையில் இருக்கும் மெயின் வில்லன் ஹரிஷ் உத்தமனை கடைசி வரை கத்துவது தவிர எதுவும் செய்ய விடாமல் வீணடித்திருக்கிறார்கள் . போலீஸ் கருப்பாடாக வரும் டிப்ஸ் கடைசியில் முதுகில் குத்தப்பட்டு இறப்பது நல்ல முடிவு …

படத்தில் ஹீரோயின் இல்லை , சாங்க்ஸ் இல்லை , தனி காமெடி டிராக் இல்லை , குறிப்பாக ஆக்ஸன் படத்தில் மாஸ் ஹீரோ பேசும் பன்ச் டயலாக் இல்லை இப்படி நிறைய இல்லைகள் இருந்தும் அதை தொல்லையில்லாத க்ரிப்பான திரைக்கதையால் கட்டிப்போடுகிறார் இயக்குனர் .

முதல் 15 நிமிடங்களுக்குள் எல்லா மெயின் கேரக்டர்களையும் படத்திற்கான  ப்ளாட்டையும் அறிமுகம் செய்து ஹீரோவின் வருகைக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆரம்பத்திலேயே அதகளத்துடன் ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் வரை ஒன் வேயில் டாப் கியரில் பறக்கிறது .

சாவதற்கு முன் ஸ்டூடெண்ட்டுக்குள் நடக்கும் காதல் ஸ்வீட்  ஹைக்கூ . 

சாம் எஸ்ஸின் பின்னணி இசை , சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , பிலோமின் ராஜின் எடிட்டிங் எல்லாமே படத்துக்கு பக்க பலம் .

லாரி சேஸிங் ஸ்டண்ட் காட்சிகளை திறம்பட எடுத்திருக்கிறார்கள் . அதுவும் நெற்றியில் பட்டையை அடித்துக்கொண்டு எதிரிகளை அடித்து பட்டையை கிளப்பும் கார்த்தி தனி அழகு …

ப்ளாஷ்பேக்கில் நேரத்தை வீணடிக்கா விட்டாலும் ” நான் என்ன செஞ்சுட்டு உள்ள போனேன்னு தெரியுமா ” என்று ஒரு பில்டப் கொடுத்ததால்  ஏற்படும் எதிர்பார்ப்பு கார்த்தி ஒரே டேக்கில் தன்  கதையை சொல்லி முடிக்கும் போது சப்பென்று ஆகி விடுகிறது .

அத்தனை பெரிய கமிஷனர் ஆஃபீஸில் கத்தி அரிவாளுடன் தாக்க வரும் கும்பலை சமாளிக்க ஒரு துப்பாக்கி கூட இல்லாமலிருப்பது , ரூட்டை மாற்றிப் போனாலும் சரியாக அந்த இடத்துக்கு கும்பல் வந்துவிடுகிறதே என்பதை நரேன் யோசிக்காமலேயே இருப்பது , போலீஸ் உளவாளி சீன்கள் குருதிப்புனலை நியாபகப்படுத்துவது ,கத்திக்குத்து , கல்லடி எல்லாம் வாங்கி குற்றுயிரும் , கொலையுயிருமாக இருக்கும் கார்த்தி மகளுக்கு வாங்கிய ஜிமிக்கியை ரமணா மிதித்தவுடன் பொங்கியெழுந்து பத்து நிமிடம் சண்டை போடுவதெல்லாம் தரமான படத்துக்கு வைக்கப்பட்ட  திருஷ்டிப்பொட்டு .

பலகோடி பட்ஜெட் , பெரிய விளம்பரம் எல்லாம் செய்து கதையை நம்பாமல் வெறும் ஹீரோவின் மார்க்கெட்டை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன் …

ரேட்டிங் : 3.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 45

  • அனந்து (http://pesalamblogalam.blogspot.com)

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply