தலைவி – THALAIVII – பட விமர்சனம் …
– அனந்து (வாங்க ப்ளாக்கலாம்)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரை அறிமுகம் 1965 ல் இருந்து முதல்வராக அறிமுகமான 1991 வரை உள்ள காலகட்டத்தை திரை வடிவில் பதிவு செய்வதே தலைவி . இளைய தளபதி விஜய்யுடன் கை கோர்த்தும் தலைவா வில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட இயக்குனர் விஜய் அதை கங்கனா வுடன் சேர்ந்து தக்க வைத்துக்கொண்டாரா ? பார்க்கலாம் ….
16 வயது முதல் 41 வயது வரையான முன்னாள் முதல்வரின் வாழ்க்கையை பல மொழிகளில் எடுக்கும் படத்திற்கு கங்கனா கரெக்டான தேர்வு . சின்ன வயது குறும்பு , பெரிய வயது வெறுப்பு எல்லாவற்றையும் கண் முன் நிறுத்துகிறார் . தொப்பை , குண்டடிக்கு பிறகு பேச்சு இது தவிர மற்றதில் எம்ஜிஆர் ஆக மாறி நிற்கிறார் அரவிந்த்சாமி . எம்ஆர்வி வேடத்தில் சமுத்திரக்கனி சரியான தேர்வு …
கலை இயக்கம் , மேக்கப் , நடிக நடிகையர் நடிப்பு , ஒளிப்பதிவு என எல்லாமே படத்துக்கு பலம் . எம்ஜிஆர்- ஜெ நட்பு காதலாவது , யாரையும் எம்ஆர்வி எம்ஜெஆர் உடன் நெருங்க விடாதது , எம்ஜெஆர் – கருணா ஈகோ என எல்லாவற்றையும் அழகாக பதிவு செய்கிறார் இயக்குனர் . சட்டசபையில் ஜெவை எதிர்க்கட்சியினர் அடித்து வெளியேற்றும் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து அதன் பிறகு ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை சீராக செல்கிறது படம் …
செட்டுக்குள் நடக்கும் காதல் காட்சிகளை தத்ரூபமாக எடுத்த இயக்குனர் நிஜத்தில் வரும் அரசியல் களத்தில் சினிமாத்தனத்தை புகுத்தி தடுமாறியிருக்கிறார் . சோ, நடராசன் இவர்களை பற்றிய எந்த சீனும் இல்லாதது இருட்டடிப்பு . சில காட்சிகளில் உள்ள செயற்க்கைத்தனம் நம்மை ஒன்ற விடாமல் தடுக்கிறது . சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பல வருடங்களாக வெற்றியே இல்லாமல் தேங்கியிருக்கும் இயக்குனர் விஜய் நல்ல படி மீண்டு வந்த விதத்தில் தலைவி – தன்னம்பிக்கை …
ரேட்டிங்க். : 3 *
இந்த விமர்சனத்தை வீடியோவில் காண இங்கே சொடுக்கவும் ..