
டோரதியும் கிரிவலமும்;
க்ரிப்டோ கையில் சிக்கிய முத்துமணிச்சரம்
டோரதி, இளையராஜாவின் மாபெரும் வீழ்ச்சியின் வெளிப்பாடு.
இதன் தொடக்கம் திலீபின் வருகை அல்ல; அதுவொரு தற்செயல் நிகழ்வே. உண்மையின் வேர்கள் வேறொரு இடத்தில் இருக்கின்றன.
நவீன காலத்தில் திருவண்ணாமலை கிரிவலம் 1990களில் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றது.
இளையராஜாவும் ரஜினிகாந்தும் இந்தத் திருப்பணியில் ஈடுபட்ட முக்கிய திரையுலகப் பிரபலங்கள். இவர்களுடைய ஆன்மிக நாட்டம் பற்றியும் சாதகம் பல விமர்சனங்கள் உண்டு. என்றாலும் பக்திமான்கள். அந்த பக்தியை மறைக்காமல் வெளிப்படுத்தும் துணிச்சலும் கொண்டவர்கள். அந்தவகையில் இவர்களை எளிய வெகுஜன பக்தர் மரபில் நிச்சயம் சேர்க்கலாம்.
மெள்ள இருவரும் கட்டம் கட்டப்பட்டனர்.
ரஜினி இமயத்தில் 2000 ஆண்டுகளாக வாழும் அதாவது கிறிஸ்து 18 வயதிலிருந்து 30 வயது வரை வந்து வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இமய மலையின் பாபாஜியின் பக்தராக ஆக்கப்பட்டார். இந்த பாபா தான் அந்த பரிசுத்த பாபா என்று மடை மாற்ற ஏற்ற பாபா!
ராகவேந்திரர் பக்தராக இருந்தவர், திருவண்ணாமலை கிரிவலம் வந்தவர், தன் படங்களில் மெள்ள மெள்ள இந்து அடையாளங்களை ஓரங்கட்ட வேண்டிவந்தது. ரஞ்சித் பக்கம் நகர்ந்து இன்று கஞ்சா மாஃபியா ஃபைனான்ஸ் செய்யும் படங்களில் கறுப்பை வெளுப்பாக்க, முழு வன்முறையில் பிளாக் ஹ்யூமர் என்ற பெயரில் தொங்கு முலைகள், பொங்கு வயிறுடன் அஞ்சனம் அப்பிய மூதாட்டி ஆடும் கேபரே நடனம் போல் கோணிய வாயுடன் குச்சிக் கால்களுடன் ஸ்டைல் காட்டிவருகிறார் (அவருடைய இந்த அந்திம கால ஸ்டைலுக்கு அருகில் கூட வர பலரால் முடியவில்லை என்பது வேறு விஷயம்).
இளையராஜா 1990கள் தொடங்கி மெள்ள மெள்ள தமிழ் திரையுலகில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இப்போது கண்ட கண்டவன் படங்களில் இசை என்ற பெயரில் இம்சைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ரஜினியும் இளையராஜாவும் திருவண்ணாமலையாரின் பக்கம் இருந்தபோது பெற்ற வெற்றியை அதன் பின் பெற முடியவில்லை. இருவரும் பக்தி சார்ந்து அங்குதான் இருக்கிறார்கள். ஆனால், வேறொரு மாஃபியாவின் பிடியில் அதன் பின் சிக்கிக் கொண்டார்கள்.
இருவருமே வெளியில் காட்டிய யோகத்தைவிட வெளியில் காட்டாத போகத்தில் திளைத்தவர்கள். அது உண்மையில் பெரிய தவறே இல்லை. ஆனால், மாஃபியாவுக்கு அது தாழத் தொங்கும் கனியைப் பறிப்பதுபோல் நின்ற நிலையிலே பறித்துக் கூடையில் போட முடிந்துவிட்டது. கசாப்புக் கடை வாசல் குப்பை மேட்டில் மேய்ந்த கோழிகள்.
திருவண்ணாமலை போலவே 1960கள் – 70களில் எழுச்சி பெற்ற புனித யாத்திரைத் தலங்கள் பல இருக்கின்றன.
ஸ்வாமி ஐயப்பன் இரு மொழித் திரைப்படம் (ஹரிவராசனம் பாடல் 1975) சபரி மலை யாத்திரை எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாத்மியம் (என்.டி.ராமாராவ் – 1960) திருமலை யாத்திரையை செல்வாக்கு பெற வைத்தது.
உண்மையில் போக்குவரத்து வசதிகள் பெருகியதும் மக்கள் தொகை பெருகியதும் தவங்களைவிட வரங்களே பெரிதாகிப் போனதும் கடமைகளைவிட உரிமைகளும் சலுகைகளும் பரிசுகளும் பெரிதாகிப் போனதும் என எல்லாம் சேர்ந்து ஆலயங்களில் கூட்டம் அலைபாயத் தொடங்கிவிட்டிருக்கின்றன. இந்தப் பெருந்தெய்வ ஆலயங்களில் கூட்டம் பெருகத் தொடங்கியதும் குல தெய்வ ஆலயங்கள் கைவிடப்படத் தொடங்கியதும் ஒரு சேரவே நடந்திருக்கின்றன.
இதன் விளைவு மத மாற்ற அதிகரிப்பில் அதாவது தாய் மத அழிப்பில் சென்று முடிந்திருக்கிறது.
கிரிவல எழுச்சி 1990களில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து 1990களில் திரையுலகை சர்ச் குறிவைத்தது. சைமன், லிங்குசாமி இன்னபிற கும்பல் மெள்ள ஊடுருவி 20-30 ஆண்டுகளில் முழுமையாகக் கைப்பற்றிவிட்டான்கள்.
திராவிட இயக்கப் படங்கள் பலவும் அசட்டு நாத்திகம், இந்து எதிர்ப்பு, போலி ஜாதி எதிர்ப்பு என்று வந்தவைதான். ஆனால், சிவாஜி காலத்து புராண, தேசியவாதப் படங்கள் அவற்றுக்கு சரியான போட்டியாகவும் மாற்றாகவும் இருந்தன. அந்தப் படங்களிலும் பல திரிபுகள், போதாமைகள் உண்டு. என்றாலும் ஒப்பீட்டளவில் அவரி திராவிட மாடல் படங்களுக்கு வலுவான மாற்று என்பதை மறக்க முடியாது. கமல் – ரஜினி காலத்தில் இவை பின்னுக்கு நகர்ந்தது உண்மையே. பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்யராஜ் என உருவான இயக்குநர் தலைமுறையும் பக்திப் படங்கள், தேசியப் படங்களில் இருந்து விலகியே இருந்தன. ஆனால், இவை எதுவும் இந்து விரோதம், இந்திய விரோதம் கொண்டவை அல்ல.
1990களுக்குப் பின்னரே இந்த மாற்றம் ஆரம்பிக்கிறது. மிகத் தெளிவான திட்டமிடலுடன் நிதானமாகவே எளிதில் வென்று காட்டியிருக்கிறான்கள். ஜோசஃபைக்கூட 20 வருடங்கள் விஜய் ஆகத்தானே வளர்த்திருக்கிறான்கள்.
இப்போது முழு வெற்றி பெற்றுவிட்டான்கள்.
நிஜத்தில் நல்ல இந்து செய்த செயலை வைத்து எடுக்கும் படங்களில் கூட இந்துவை வில்லனாகவும் முஸ்லீமை நாயகனாகவும் காட்டுதல், நிஜத்தில் தவறு செய்த கிறிஸ்தவனை நிழலில் ஜாதி வெறியனாகவும் காட்டினால்தான் இங்கு படம் எடுக்க முடியும். சுவரில் தெரேசாவின் படம் தான் தொங்கவிடவேண்டும். அன்னை சாரதாவின் படமோ நிவேதிதாவின் படமோ கூட இடம்பெறக்கூடாது.
சுருக்கமாகச் சொன்னால் பாதிரியின் ஒப்புதல் பெறாமல் எந்த ஸ்க்ரிப்டும் இங்கே படமாக்கப்பட முடியாது.
திமுக கும்பல் திரையரங்கம் தொடங்கி திரை வணிகம் முழுவதையும் ஆக்கிரமித்துவருகிறது. சர்ச் மாஃபியா திரைப்பட உள்ளடக்கத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இவன்கள் கஞ்சாவை நார்மலைஸ் செய்வான்கள். வன்முறையை உட் குழு மோதலைப் பெருக்குவான்கள். தேச, குடும்ப, மத, ஜாதி மதிப்பீடுகளை இழிவுசெய்வான்கள்.
தமிழக திரையுலகை சர்ச் கைப்பற்றியதுபோலவே கேரள திரை உலகையும் ஆப்ரஹாமிய சக்திகள் அதே 1990கள் 2000கள் தொடங்கி கைப்பற்றிவிட்டிருக்கின்றன.
சித்ரம், பரதம், ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா என கர்நாடக சங்கீதப் பின்னணி கொண்ட மற்றும் யதார்த்தப் படங்களில் நடித்த மோகன்லால் இன்று எப்படி மாறியிருக்கிறார் என்று பார்த்தால் சர்ச்சின் செயல்திட்டம் நன்கு புரியும்.
ஆந்திராவில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். என எடுக்கப்படுகின்றன. ஆனால் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திராவில் நடந்த மத மாற்ற ஆக்கிரமிப்பு இதுவரை வெளியில் தெரியவில்லை. அவ்வளவுதான்.
டோரதி திரைப்படம் இந்த வன்ம வரிசையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
முதலாவதாக வீர மறவர் ஜாதியில் பெண்ணாக உணரும் ஆண் என்பதே மிக மிகத் தெளிவான திட்டமிட்ட வெறுப்பின் வெளிப்பாடு. எந்தவொரு குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கும் உற்றார் உறவினருக்கும் தம் குடும்பத்தில் ஆணாகப் பிறந்தவர், பெண்ணாக உணர்ந்து மாறுவதென்பது அதிர்ச்சியும் வலியும் தரக்கூடியதுதான். அப்படி எடுப்பதுதான் நியாயம். ஆனால், ஜாதிய மற்றும் ஆணாதிக்கப் பின்புலத்தை இங்கு கொண்டுவருவதென்பது தெளிவான வன்மச் சித்திரிப்பே.
நேரெதிர் முரண் இருந்தால்தான் கதைக்கு வலிமை கிடைக்கும் என்ற எளிய கலைச் சூத்திரம் மட்டுமே இந்தத் திரைக்கதைக்குக் காரணம் அல்ல.
கே காதலாகக் காட்டும் புரட்சி நேர்மையும் இல்லை. பாலினம் மாறிய தோழனை, தோழியாகப் பார்க்கும் கலை அமைதியும் நேர்த்தியும் இல்லை. இரண்டுங் கெட்டானாகவே படம் முடிகிறது.
ஆருயிர் நண்பன், ஒரு கட்டத்தில் தன்னைப் பெண்ணாக உணர்ந்து பால் மாற்றம் அடைகிறான் என்பது அந்த நண்பனுக்குமே அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் தான் இருக்கும். அதிகபட்சம் அவன் மீதான நட்பினால் அந்த மாற்றத்தை மிகுந்த சிரமத்துடன் ஏற்றுக் கொண்டு அவனுக்குத் துணையாக நிற்க முன்வரலாம். இதுதான் இயல்பான நடைமுறையாக இருக்கும்.
நண்பன் பெண்ணாக மாறியதும் பால்ய கால நட்பு காதலாக மாறிவிடுமா என்ன..? பேத்தலான கற்பனை. உச்சபட்ச அன்பு என்றால் காதலாகத்தான் இருக்கவேண்டுமா..?
இது திரைக்கதையின் கொடுமையென்றால் இதற்கு இளையராஜாவை இசையமைக்கச் செய்ததுதான் ஆகப் பெரிய வன்மம்.
அவரும் மீனாட்சி, மரகதமணி, கிரீடம், தனியா தவிக்கிறேனே, ஒத்தையடிப் பாதையிலே என்றெல்லாம் தாறுமாறாக உருகித் தீர்த்திருக்கிறார். பால் மாறிய நண்பனைப் பார்த்து பால் மாறாத நண்பன் பாடும் பாட்டா இது… கருமம்… கன்றாவி.
1990களில் சர்ச் தொடங்கிய வன்மச் செயல்பாடுகளின் உச்சம் இளையராஜாவை இந்தப் படத்தில் வன்கொடுமை செய்திருப்பது.
பேசாமல் அவர் இயேசுவும் உயிர்த்தெழுந்தார் என்று ஒப்புக்கொண்டு ஓரமாக ஒதுங்கிவிடலாம்… பாவம்.
தன் சொந்த பட ப்ரமோவுக்கே வர யோசிக்கும் அல்லது அதற்கு மட்டுமே வரும் மணிரத்னமெல்லாம் இந்தப் படத்தைப் புகழ்வதென்பது அவருடைய ஆளுமையின் வீழ்ச்சியின் உதாரணமே. ரோஜா படத்தில் தேசியக் கொடியை தீவிரவாதி எரித்தபோது ஜெய் ஹிந்த் என்று கத்தியபடி அணைக்கும் காட்சியை வைத்திருந்தவர், பல வருடங்கள் கழித்த பேட்டியில் தேவ்டியா மகனே என்று திட்டுவதைவிட ஹெய் ஹிந்த் என்று சொல்வது தீவிரவாதிக்கு கூடுதல் அவமதிப்பைத் தரும் என்பதால் அப்படிக் கத்தவைத்தேன். மற்றபடி எனக்கும் என் கதாபாத்திரத்துக்கும் தேச பக்தியெல்லாம் கிடையாது. நாங்கள் எல்லாம் சர்வ தேச மனிதர்கள் என்பதுபோல் பிதற்றியிருப்பார். அப்படியாக ஏற்கெனவே இந்த ஆளுமை வீழ்ச்சியின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவர் இதில் மேலும் வேகமாகச் சறுக்குகிறார்.
ஜென்ஸி தற்குறிகள் தொடங்கி ரிட்டயர்டு சமூக நீதிக் காவலன்கள் வரை ஒட்டு மொத்த பிரபலங்களும் கிரானைட் வீரமணி விஷயத்தில் காட்டும் கள்ள மெளனம் புரிகிறதா..?
க்ரிப்டோ ஃபைனாஸியர் சொல்வதற்கு ஏற்பவே கலைத்திறமை காட்ட முடியும்.
சாத்தானின் பிள்ளைகள் எழுதிக் கொடுப்பதற்கு ஏற்பவே சமூக நீதி பேசமுடியும்.





Leave a Reply