Connect with us

விமர்சனம்

DIL BACHERA – தில் பச்சேரா – HEART TOUCHING …

Published

on

dil bachera e0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaae0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebe heart touching

சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் .

கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி 

சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்த முன் வரிசை ஹிரரோக்களில் ஒருவரானவர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் . ஆனால் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது கடைசி படம் தில் பச்சேரா ( DIL BACHERA ) வை டிஷ்னீ + ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள் . அபோவ் ஆவெரேஜ் காதல் படம் ஹீரோவின் தற்கொலையால் அதிக முக்கியத்துவம் அடைந்திருக்கிறது …

இரண்டு கேன்சர் நோயாளிகளின் காதல் கதையே தில் பச்சேரா . சாவை நினைத்து கவலைப்படும் கிஸீ பாசு ( சஞ்சனா சங்கி ) வாழ்வில் அதை துளியும் சட்டை செய்யாத இளைஞன் ராஜ்குமார் இமானுவேல் ஜுனியர் 

( சுஷாந்த் சிங்க் ராஜ்புட் ) நுழைந்த  பிறகு என்ன நடக்கிறது என்பதே படம் . 

ஹீரோயின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் கதையை சொல்வதால் என்ன நடந்திருக்கும் என்பதை முன்பே யூகிக்க முடிகிறது …

சுஷாந்த் மணிரத்னம் பட ஹீரோ போல துறுதுறு வென இருக்கிறார். கேன்சரால் ஒரு காலை இழந்தாலும் செயற்கை காலுடன் இவர் ஆட்டம் பாட்டம் என வலம் வருவது லேசாக இடித்தாலும் தனது துள்ளலான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார் . இந்த படத்தை பார்க்க அவர் இல்லாதது காலக்கொடுமை . சஞ்சனா ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் ஹீரோயினாக இதுவே முதல் படம் . ஹீரோவிற்கோ இது கடைசி படம் . 

சஞ்சனா படம் நெடுக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு வந்து நம்மையும் உச் கொட்ட வைக்கிறார் . ஹீரோயின் பெற்றோர்கள் இருவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள்  . அதிலும் ஹீரோயின் அம்மா அவரை விட அழகாக பெங்காலி ரசகுல்லா  போல இருக்கிறார் . கேசன்சரால் கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் வரும் ஹீரோவின் நண்பர் கவனிக்க வைக்கிறார் …

சைஃப் அலி கான் சின்ன ரோலில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் கவர்கிறார் . அவருடைய கேரக்டர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை .  

ஆனாலும் அவர் பேசும் ” LIFE itself is Incomplete ” என்கிற வசனம் யோசிக்க வைக்கிறது . இந்த படம் ” The Fault in our Stars ” என்கிற நாவலை  எடுக்கப்பட்டிருக்கிறது , ஆனால் இதே கதையம்சம் உள்ள இதயத்தை திருடாதே என்கிற படத்தை மணிரத்னம் முப்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்திருப்பார் . அந்த படமும் , இசைஞானியின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நன்றாக இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை … 

இரண்டரை மணி நேரம் படத்தை  இழுக்காமல் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் முடித்தது நல்லது . ஆனாலும் டீட்டைலிங் இல்லாமல் ஒரு அவசர கதியில் முடித்ததும் , முன்னரே படம் எதை நோக்கி போகும் என்பதை யூகிக்க முடிந்ததும் சறுக்கல் . சுஷாந்த் சிங்க் அண்ட் சஞ்சனா நடிப்பு , சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் . 

DIL BACHERA – HEART TOUCHING 

RATING 3.5 * / 5 * 

இந்த படத்தின் விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் .

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

7 − 7 =

லேட்டஸ்ட்

chitra chitra
செய்திகள்3 வாரங்கள் ago

நடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்!

நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக

annathe rajini annathe rajini
கிசுகிசு3 வாரங்கள் ago

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...

chitra chitra
செய்திகள்1 மாதம் ago

சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி?! காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’!

அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

siranjeevi siranjeevi
செய்திகள்1 மாதம் ago

மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...

ajith ajith
செய்திகள்1 மாதம் ago

அந்த இயக்குனர் இல்லனா நானு! – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்

அஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...

Advertisement