Connect with us

விமர்சனம்

1917 – FOREVER … விமர்சனம்!

Published

on

1917 forever e0aeb5e0aebfe0aeaee0aeb0e0af8de0ae9ae0aea9e0aeaee0af8d

1917 – இது 2019 இல் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் , 10 நாமினேஷன்களையும் மற்றும் பல பாஃடா விருதுகளையும் இல் தட்டிச்சென்ற ஹாலிவுட் மூவி சோனி லிவ் ( OTT ) வில் ஜுலை 17 முதல் ஒளிபரப்பாகிறது . சாம் மெண்டெஸ் இயக்கத்தில் மெக்கே , டீன் சார்லஸ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் இன்னும் சில ஆஸ்கார் விருதுகளையும்  மயிரிழையில் இழந்திருக்கிறது …

1917 இல் முத்த உலகப்போரில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது . 2 ஆம் உலகப்போரை மையமாக வைத்து ஏற்கனவே வந்திருந்த ஷேவிங் ப்ரைவேட் ரியான் , டன்கிர்க் போன்ற படங்களை போலவே தரமாக வந்திருக்கும் மற்றுமொரு படம் . பிரிட்டிஷ் – ஜெர்மன் இடையே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரிட்டிஷின் ஒரு கேம்பிலிருந்து இன்னொரு கேம்பிற்கு தகவலை சொல்லும் பொறுப்பு இரண்டு வீரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது . தாக்குதலை நிறுத்த சொல்வதற்கான இந்த தகவல் மூலம் அந்த வீரரின் சகோதரர் உட்பட 1500 வீரர்களை சேதத்திலிருந்து காப்பாற்ற முடியும் . ஜெர்மன் படைகளின் தாக்குதல்களை தாண்டி இந்த ஆபத்தான சவாலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பதை விறுவிறுப்பாக சொல்வதே 1917 .

நேரத்தை வீணடிக்காமல் முதல் சீனிலேயே கதையை தொடங்கி  விடுகிறார்கள் . சகோதரருக்காக ஒரு வீரர் உடனடியாக கிளம்ப மற்றொருவர் முதலில் தயங்குகிறார் ஆனால் கடைசியில் அவரே அந்த மிஷனை முடித்து வைப்பது சிறப்பு . போர் சம்பந்தமான படமென்பதால் குன்டுகள் சத்தத்தால் காதுகளை துளைக்கமால் , தேசப்பற்று வசனங்களால் புழிந்து எடுக்காமல் காட்சிகளின் மூலம் சொல்ல வந்ததை சிம்பிளாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொன்ன விதத்தில் இயக்குனரின் உலகத்தரம் தெரிகிறது . போகும் வழியெல்லாம் வீரர்கள் சந்திக்கும் சடலங்களின் வாயிலாக போரின் கொடூரத்தை உணர்த்தியது இயக்குனரின் சாமர்த்தியம் …

இரு வீரர்களும் தடைகளை தாண்டி கடப்பதை விறுவிறுப்பாக சொல்கிறது திரைக்கதை . ஒரு வீரர் மாற்றுவரின் பதக்கத்தை பற்றி ஆர்வமாக கேட்க அவரோ அதை வைத்து சரக்கடித்து விட்டேன் என்று கூலாக சொல்லும் வசனங்கள் சீரியஸான வார் படத்தின் ஹைக்கூ . நடக்கும் வழியில் ஜெர்மன் வீரரால் நேரும் கொடுமை , பாழடைந்த வீட்டில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு தனது உணவை கொடுக்கும் வீரரின் பரிவு என எல்லாமுமே ஓவர் டோஸாக இல்லாமல் மனத்தில் பதியும் படி இருப்பது ஹைலைட் …

ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைன் , விசுவல் எஃ பெக்ட்ஸ் இதற்காக ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற படம் நிச்சயம் கலை , எடிட்டிங்க் , திரைக்கதைக்காகவும் விருதுகளை அள்ளியிருக்கலாம் . ஒரு வார் ஜோனுக்குள் நாம் போய் வந்த உணர்வை கொடுப்பதும் , யாரோ சிலரின் அதிகார பசிக்காக ஏன் பல லட்சம் உயிர்கள் பலியாக வேண்டுமென்கிற கேள்வி வலுவாக எழுவதும் படத்தின் மிகப்பெரிய வெற்றி .

1917 – எக்காலத்துக்கும் பொருந்தும் …

இந்த விமர்சனத்தைய யூடியூபில் காண கீழே சொடுக்கவும் ..

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × 5 =

லேட்டஸ்ட்

chitra chitra
செய்திகள்3 வாரங்கள் ago

நடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்!

நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக

annathe rajini annathe rajini
கிசுகிசு4 வாரங்கள் ago

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...

chitra chitra
செய்திகள்1 மாதம் ago

சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி?! காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’!

அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

siranjeevi siranjeevi
செய்திகள்1 மாதம் ago

மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...

ajith ajith
செய்திகள்1 மாதம் ago

அந்த இயக்குனர் இல்லனா நானு! – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்

அஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...

Advertisement