Connect with us

விமர்சனம்

பொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …

Published

on

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால்

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால் தியேட்டரில் ரிலீசாக முடியாமல் ஓடிடி ( Over The Top ) வாயிலாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள் 

e0aeaae0af8ae0aea9e0af8de0aeaee0ae95e0aeb3e0af8d e0aeb5e0aea8e0af8de0aea4e0aebee0aeb3e0af8d e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d

பப்ளிசிட்டிக்காக வழக்குகள் போடும் பெட்டிஷன் பெத்துராஜ் ( பாக்யராஜ் ) 15 வருடங்களுக்கு முன் ஜோதி எனும் வட நாட்டு பெண்ணை குழந்தைகளை கடத்தி கொலை செய்ததற்காகவும், இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காகவும் போலீசார்  என்கவுண்டர் செய்த  வழக்கை தூசி தட்டி எடுத்து தன் மகள் வெண்பா பெத்துராஜிடம்
ஜோதிகா ) வாதாட கொடுக்கிறார் . குழந்தைகளை கொலை செய்த அந்த சைக்கோ கொலைகாரி ஜோதி யார் ? அந்த கொலைகளை அவர் தான் செய்தாரா என்பதை நீதிமன்றத்தில் வாத  பிரதி வாதங்களுடன் விளக்குவதே பொன்மகள் வந்தாள் …

ஐந்து ரூபா கொடுத்தால் ஐநூறுக்கு நடிக்கும் ஜோதிகா இதில் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் ஆனால் இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் படம் முழுக்க இவரே டாமினேட் செய்வது போரிங்க் . அரசு வழக்கறிஞராக வரும் பார்த்திபன் முதலில் பிரமிக்க வைத்து பின் பம்மி  விடுகிறார் . மரியாதைக்காக மல்லாடும் பெரிய மனுஷராக தியாகராஜன் கச்சிதம் . கோர்ட்டில் பார்த்திபனையே மடக்கும் சீனில் பாக்யராஜின் சீனியாரிட்டி பளிச்சிடுகிறது . நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் கேரக்டரில் தெளிவு இல்லை …

ஒரு தாயின் சபதம் , விதி , நான் சிவப்பு மனிதன் இவையெல்லாம் கோர்ட் சீன்களுக்காகவே பேசப்பட்டு ஹிட் ஆனவை . சமீப காலத்தில் வந்த மனிதன் , நேர்கொண்ட பார்வை எல்லாம் ரீ மேக்காக இருந்தாலும் மேக்கிங்கால் வெற்றியடைந்த படங்கள் . அந்த வரிசையில் ஒரு கோர்ட் டிராமாவை தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . அதிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேசும் கதையை கையில் எடுத்ததற்கு கூடுதல் பாராட்டுக்கள் . சரியான நட்சத்திர தேர்வு , ஒரே லொகேஷனில் வைத்தே படத்தை சிக்கனமாக முடித்தது , லக்ஷ்மி சரவணகுமாருடன் சேர்ந்து எழுதிய கூர்மையான வசனங்கள் , படத்தை  எங்கும் அனாவசியமாக அலையவிடாமல் இரண்டு மணி நேரத்தில் முடித்தது இவையெல்லாம் இயக்குனருக்கு ப்ளஸ் …

கோர்ட் டிராமா படம் எனும் போது  நிறைய மர்ம முடிச்சுகளை போட்டு
அவிழ்ப்பதில் தான் இருக்கிறது சூட்சுமம் ஆனால் அதை விட வெறும் வசனங்களாலேயே படத்தை ட்ராமா போல கொண்டு போனது சறுக்கல் . இயக்குனர் நல்ல சீன்களுக்காக இன்னும் மெனக்கட்டிருந்தால் கலக்கியிருக்கலாம் . ஜட்ஜாக வரும் லேடியை பெத்துராஜ் கோர்ட்டில் மாமி என்று அழைக்கிறார் . ஜட்ஜிடம் இப்படியெல்லாம் தெனாவெட்டாக பேசினால் பொத்துராஜ்  என்று வாயிலேயே போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள் . காமெடி என்கிற பெயரில் வைக்கப்பட்ட கேவலமான சீனுக்கு இது ஒரு உதாரணம் …

பெண்களுக்கு ஆதரவாக ஜோதிகா பேசும் போது கோர்ட்டில் நிறைய பேர் அழுகிறார்கள் , நமக்கு தான் காட்சியில் எந்த அழுத்தமும் இல்லாததால் ஒரு எழவும் வரவில்லை . பிங்க் படத்தில் இதே போன்ற சீன்களும் , வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றவை . இந்த இடத்தில் தனக்கான பெரிய வாய்ப்பை இயக்குனர் நழுவ விட்டிருக்கிறார் . அதிலும் வெண்பா என்று பெயரை வைத்துக்கொண்டு ஜோதிகா தனது மோசமான உச்சரிப்பால்  தமிழை நிறையவே துன்பா செய்கிறார் . சாட்சி , ஆதாரங்கள் எதுவும் பெரிதாக  இல்லாமல் வில்லனை வெறுப்பேற்றியே உண்மையை வரவைப்பதெல்லாம் பி.எஸ்.வீரப்பா காலத்து ஃபார்முலா .  பெண்களை டார்கெட் ஆடியன்ஸாக வைத்து வந்திருக்கும் படம் ஓடிடி யில் ரிலீசாகி இருப்பது கூடுதல் பலம் . ஏனெனில் சீரியலுக்கு இது எவ்வளவோ மேல் மற்றபடி ஒரு முழு நீள படமாக பொன்மகள் வந்தாள் பொருள் பாதி தந்தாள்  …

ரேட்டிங்க்  : 2.75 * / 5 *   

ஸ்கோர் கார்ட் : 41

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

10 + sixteen =

லேட்டஸ்ட்

chitra chitra
செய்திகள்3 வாரங்கள் ago

நடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்!

நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக

annathe rajini annathe rajini
கிசுகிசு4 வாரங்கள் ago

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...

chitra chitra
செய்திகள்1 மாதம் ago

சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி?! காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’!

அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

siranjeevi siranjeevi
செய்திகள்1 மாதம் ago

மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...

ajith ajith
செய்திகள்1 மாதம் ago

அந்த இயக்குனர் இல்லனா நானு! – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்

அஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...

Advertisement