[prisna-google-website-translator]

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

ஜீ5 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள ‘ஆலா’  திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்…

எல்லோரும் இளமை வாழ்வை கடந்தே வந்திருக்கிறோம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமை, கல்லூரிப்பருவம் ஆகியவை முக்கிய மற்றும் மறக்க முடியாத பல நினைவுகள், வலிகள், கனவுகளை கொண்டதாகவே இருக்கிறது. அதைத்தான் ஆலா திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. 

காதல், கனவுகள், வலிகள் என ஆலா பட தலைப்பின் அருகே குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் முழுத்திரைப்படமும் அவைகளை பற்றியே பேசுகிறது.

இப்படத்தின் கதாநாயகன் சூரி மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்காக தனது தோழியுடன் விமானத்தில் செல்கிறான். அப்போது, அவனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து தோழி ஆர்வமாய் கேட்க, அவன் தன் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதுதான் ‘ஆலா’.

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

ஆலா என்ற தெலுங்கு வார்த்தைக்கு ‘அலைகள்’ என அர்த்தம். ஒரு வாலிபன் தனது இளமை வாழ்வில் சந்திக்கும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரிக்கதை ஆகும்.  குறிப்பாக வாழ்வில் எது நடந்தாலும் அங்கேயே நின்றுவிடக்கூடாது. நகர்ந்து செல்ல வேண்டும். சிறு தோல்வியில் வாழ்க்கை முடிவதில்லை என்பதை ‘ஆலா’ திரைப்படம் அழகாகவும், ஆணித்தரமாகவும் நமக்கு விளக்குகிறது.

சூரி, ஸ்னேகித், மிக்கி என்கிற மைக்கேல், ரவி, இந்து மற்றும் ஸ்ரி என்கிற  நண்பர்கள் கூட்டத்தை சுற்றி இக்கதை நகர்கிறது. இந்துவின் மீது  ஸ்னேகித்துக்கு காதல். ஸ்னேகித் மீது  இந்துவுக்கும் காதல் இருப்பதாக கருதும் சூரி, இந்துவிடம் காதலை தெரிவிக்குமாறு ஸ்னேகித்திடம் கூறுகிறான். அதன்பின் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஸ்னேகித் காணாமல் போகிறான். ஸ்னேகித் என்ன ஆனான்? அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் ‘ஆலா’ திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

இப்படம் நண்பர்களை சுற்றி வலம் வந்தாலும் சூரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்கவ் கொமேராவே இப்படத்தின் கதாநாயகனாக இருக்கிறார். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது, நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை எனில் முதலில் நிற்பது, டிங்குவை கண்டதும் காதல் கொள்வது, நெருக்கமான நண்பன் ஸ்னேகித் காதல் தோல்வியில் எடுத்த முடிவை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கிக் கிடப்பது, பின் தந்தைக்காக தனது வாழ்க்கையை மீண்டும் துவங்குவது என ஒவ்வொரு படிநிலையிலும் அவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

இந்து கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா சதீஷனுக்கு முக்கிய வேடம் என்றாலும், டிங்கு வேடத்தில் நடித்துள்ள ஷில்பிகா கவனம் ஈர்க்கிறார். அமெரிக்காவில் படித்துவிட்டு திரும்பும் அவர் தப்பு தப்பாக தெலுங்கு பேசுவதும், சூரியுடன் ஜாலியாக சுற்றுவதும், அவர் மீது காதல் கொள்வதும் என அவரின் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். சிரிக்கும் வசீகர கண்களின் வழியே உணர்வுகளை எளிதில் கடத்தி விடுகிறார்.

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

சூரியின் நண்பன் ஸ்னேகித்தாக நடித்துள்ள அங்கித் கோயா இந்துவின் மீது காதல் கொண்டு, அதன்பின் தவறான முடிவை எடுத்து நம்மை கலங்க விடுகிறார். தான் எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு முன் தனது நண்பன் சூரிக்கு சென்று வருகிறேன் என்பது போல் ஒரு சைகை காட்டுகிறார்.  அவர் ஏன் அதை செய்தார் என்பது அதன் பின்னரே நமக்கும், சூரிக்கும் புரிய வருகிறது.

சூரியின் தந்தையாக நடித்தவர் உட்பட பலரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். சூரியின் நிலையை எண்ணி மாரடைப்பு வந்ததை  கூட காட்டிக் கொள்ளாமல் இந்த வயதில் இது சகஜம் என அவர் மகனிடம் பேசுவதும், தந்தையின் மனதை புரிந்து சூரி அவரின் ஆசைப்படி நடக்க சம்மதிப்பதும் உணர்ச்சிகரமான காட்சிகள்.

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

ஆலா திரைப்படத்தை எழுதி, இயக்கியதோடு, ஒளிப்பதிவும் செய்துள்ளார் சரத் பாலன்கி. தலைப்பு ஆலா (அலைகள்) என்பதால் கடற்கரையின் அருகிலேயே பெரும்பாலான காட்சிகளை படம்பிடித்துள்ளார். கடற்கரையின் அழகை பல இடங்களில் டாப் ஆங்கிளில் படம் பிடித்து அசத்தியுள்ளார். கடற்கரையை அவரது கேமரா சிறப்பாக படம் பிடித்துள்ளது. குறிப்பாக கோவா கடற்கரையின் அழகை அவ்வளவு நேர்த்தியாக, அழகாக மனதை கவரும் வகையில் படம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த கால இளைஞர்கள் இளமை பருவத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், ஆசைகள், காதல், வலி என அனைத்தையும் ஆலா படத்தில் அவர் பிரதிபலித்துள்ளார்.

இந்த உலகத்தில் யார்தான் பிரச்சனயை சந்திக்கவில்லை..? இறப்பையும், கண்ணீரையும் சந்திக்காத மனிதர்கள் இருக்கிறார்களா? தோல்வியை சந்திக்காத வீரன் இருக்கிறானா? சிறு பிரச்சனைகளுக்காக வாழ்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என படத்தின் இறுதிகாட்சியில் அவர் எழுதியுள்ள வசனங்கள் இந்த காலை இளைஞர்களுக்கன தேவையான முக்கிய அறிவுரைகள் ஆகும்.

காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

இப்படத்தின் இசையமைப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக ஸ்ரீனிவாச சர்மா ராணி இசையில் சிவகிருஷ்ணா எழுதி, விஜய் யேசுதாஸ் பாடிய ‘குகிள்ளாலோ’ பாடல் மனதை மயக்கும் மெலோடியாக அமைந்துள்ளது. இப்பாடல், திரைப்படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 250 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பாடலை கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், இளமையை, நட்பை, காதலை, வலியை, வாழ்க்கையின் யதார்த்தத்தை ‘ஆலா’ திரைப்படம் தெளிவாக பேசுவதால் இளம் ரசிகர்களை கவரும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இப்படம் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும், சப்டைட்டில் மூலம் இப்படத்தை நீங்கள் பார்க்கலாம்.

ஜீ5 இணையதளத்தில் ‘ஆலா’ திரைப்படத்தை கண்டு களியுங்கள்.. ரூ.49 மட்டுமே செலுத்தி ஒரு மாதம் முழுவதும் பல இணைய தொடர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்!

https://www.zee5.com/

The post காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’  appeared first on – Dhinasari Tamil.

Source: விமர்சனம்

The post காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’  appeared first on Vellithirai News.

Leave a Reply