[prisna-google-website-translator]

வீட்டை விட்டு துரத்திட்டாங்க…தேங்க்யூ பிரண்ட்ஸ்.. மிஸ்யூ ஃபிரண்ட்ஸ் பெண்மணி வெளியிட்ட அடுத்த வீடியோ

வீட்டை விட்டு துரத்திட்டாங்க…தேங்க்யூ பிரண்ட்ஸ்.. மிஸ்யூ ஃபிரண்ட்ஸ் பெண்மணி வெளியிட்ட அடுத்த வீடியோ

டிக்டாக் வீடியோவில் வீடியோ வெளியிட்ட பெண்மணி தன்னை வீட்டிலிருந்து மகன் துரத்தி விட்டுவிட்டார் என மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு பெண்மணி டிக்டாக் செயலியில் பேசிய வீடியோவில் ‘ எனது செல்போன் பழுதடைந்து விட்டது. எனவே, புதிய செல்போனை வாங்கிய பின்னரே உங்களுடன் பேச முடியும். அதுவரை மிஸ் யூ பிரண்ட்ஸ்’ என கண்ணீர் விட்டு கதறியபடி பேசியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து டிக்டாக் வீடியோவிற்கு இவ்வளவு அடிமையாக இருக்கலாமா? என கிண்டலடித்திருந்தனர். இது ஒரு வித மன வியாதி எனவும் மனநல மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்மணி தற்போது மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘ நண்பர்களே உங்களுக்கு மிகவும் நன்றி.. நான் மிஸ்யூ பிரண்ட்ஸ் எனக்கூறி வெளியிட்ட வீடியோவை பேச்புக்கில் போட்டு என்னை உலகம் முழுக்க வைரல் ஆக்கிவிட்டீர்கள். எனது உறவினர்கள் எல்லோரும் என்னிடம் இதுபற்றி விசாரிக்கின்றனர். என் மகன் என்னை வீட்டிலிருந்து விரட்டி விட்டான்’ என அதில் பேசியுள்ளார். அவர் இப்படி செய்து வீட்டீர்களே? எனப் பேசுகிறாரா.. அல்லது உண்மையிலேயே மகிழ்ச்சியில் பேசுகிறாரா என்பதுதான் புரியவே இல்லை.

The post வீட்டை விட்டு துரத்திட்டாங்க…தேங்க்யூ பிரண்ட்ஸ்.. மிஸ்யூ ஃபிரண்ட்ஸ் பெண்மணி வெளியிட்ட அடுத்த வீடியோ appeared first on Dhinasari Tamil.

Source: டிரைலர்

The post வீட்டை விட்டு துரத்திட்டாங்க…தேங்க்யூ பிரண்ட்ஸ்.. மிஸ்யூ ஃபிரண்ட்ஸ் பெண்மணி வெளியிட்ட அடுத்த வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply