ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

இளையராஜா இசையில் உருவாகியுள்ள சைக்கோ பட பாடல் வீடியோ யுடியூப்பில் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சைக்கோ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘உன்ன நினைச்சி பாடல்’ ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் தனது இருப்பை இசைஞானி இளையராஜா நிரூபித்துள்ளார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘சைக்கோ’ படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கினும், இளையராஜாவும் இணையும் 3வது படம் இது. இப்படத்தில் அவர் இசையமைத்த ‘ உன்ன நினைச்சி’ பாடல் ஆடியோ கடந்த 18ம் தேதி வெளியானது. அப்பாடலை கேட்டு ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளனர். பாடல் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த வீடியோவை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இப்பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். நிச்சயம் இப்படம் இந்த வருடத்தில் சிறந்த மெலடி பாடலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இப்பாடலை எழுத கவிஞர் கபிலனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மொத்தத்தில் தான் ஒரு இசை சைக்கோ என்பது இப்படம் மூலம் இளையராஜா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். சைக்கோ திரைப்படம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: டிரைலர்

The post ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல் appeared first on Vellithirai News.


Comments

Leave a Reply

%d bloggers like this: