30 வருடங்களாக புகை பழக்கம்….நுரையீரலை பார்த்த ஷாக் ஆய்டுவீங்க : வீடியோ

30 வருடங்களாக புகை பழக்கம்….நுரையீரலை பார்த்த ஷாக் ஆய்டுவீங்க : வீடியோ

பல வருடங்களாக சிகரெட் குடித்து இறந்து போன ஒருவரின் நுரையீரல் கருத்துப் போன வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சைனாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் 52 வயதுள்ள அந்த நபர் இறந்து போனார். இவரின் மரணமடைந்தவுடன், இவரின் நுரையீரலை வேறு ஒரு நபருக்கு பொருத்த முயற்சி நடந்தது. ஆனால், அவரின் நுரையீரலை பார்த்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரது நுரையீரல் முழுவதும் கருப்பு நிறம் படிந்திருந்தது.

அவர் கடந்த 30 வருடங்களாக தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் குடித்து வந்துள்ளார். அதனாலேயே அவர் இறந்து போயிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

அவரின் நுரையீரலை யாருக்கும் பொருத்த முடியாது என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். அவரது நுரையீரலை மருத்துவர்கள் கைகளால் தூக்கிப் பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Source: டிரைலர்

The post 30 வருடங்களாக புகை பழக்கம்….நுரையீரலை பார்த்த ஷாக் ஆய்டுவீங்க : வீடியோ appeared first on Vellithirai News.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

twenty − 10 =