[prisna-google-website-translator]

என்னை கடத்தியது யார்? – மா நித்யா நந்திதா வெளியிட்ட வீடியோ

என்னை கடத்தியது யார்? – மா நித்யா நந்திதா வெளியிட்ட வீடியோ

தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் இது தனது பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட வதந்தி எனவும் நித்தியானந்தா ஆசிரம சீடர் மா நித்யா நந்திதா வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே நித்யானந்தா ஆசிரமத்தில் சீடராக மாறியுள்ள பெண் சீடர் நந்திதாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவரை வைத்து பல மீம்ஸ்களிலும் வெளிவந்தது.

என்னை கடத்தியது யார்? – மா நித்யா நந்திதா வெளியிட்ட வீடியோ

இவர் நித்யானந்தா ஆசிரமத்தினரால் கடத்தி வைக்கப்பட்டும், மூளை சலவை செய்யப்பட்டும் இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது. அவரின் பெற்றோர் தரப்பிலும் அப்படியே கூறப்பட்டது.

என்னை கடத்தியது யார்? – மா நித்யா நந்திதா வெளியிட்ட வீடியோ

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து மா நித்ய நந்திதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னை யாரும் கடத்தவில்லை. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நான் ஆசிரமத்தில் இருக்கிறேன். ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் என் பெற்றோர்கள் உருவாக்கிய இந்த மன உளைச்சலில் இருந்த தப்பிக்கவே எனது சுய விருப்பத்தின் பேரில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறேன். எனது பெற்றோர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்’ என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Source: டிரைலர்

The post என்னை கடத்தியது யார்? – மா நித்யா நந்திதா வெளியிட்ட வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply