எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் , சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து டிவி சீரியல் பார்வையாளர்களை ஈர்த்தவர் நடிகை மேக்னா வின்செண்ட். இந்தியில் வெளியான சாத் நிபானா சாதியா என்ற சீரியலின் தமிழ் ரீ மேக் சீரியல்தான் தெய்வம் தந்த வீடு சீரியல்.

இதில் மேக்னா வின்செண்ட்டின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழில் பொன்மகள் வந்தாள், அவளும் நானும் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கும் மேக்னா வின்சென்ட், மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

டிவி தொடர்கள் மட்டுமின்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்திலும் மேக்னா நடித்திருக்கிறார். இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

திருமணத்தில் ஏராளமான திரைத்துறையினரும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த 1 வருடத்திலேயே டான் டோனி – மேக்னா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட , இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து டான் டோனி தற்போது மறுமணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Trending