ஊரடங்கு ஸ்பெஷல்: டிடியில் அடுத்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணா தொடர்!

ராம்னாத் சாகர் எழுதி, இயக்கி இருந்தார்

தனியார் சேனல்களின் வளர்ச்சிக்கு முன்பு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனில் பிரமாண்டமாக ஒளிபரப்பான தொடர்கள், ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ணா. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிறது.

தற்போது ஸ்ரீகிருஷ்ணாவும் ஒளிபரப்பாக இருப்பதாக தூர்தர்ஷன் அறிவித்துள்ளது. இந்த தொடர் 1993ம் ஆண்டு டி.டி.மெட்ரோவிலும், 1996ம் ஆண்டு டிடி நேஷனிலும் ஒளிபரப்பானது.இது பகவான் கிருஷ்ணரின் முழு வாழ்க்கையை சித்தரிக்கும் தொடர். இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணராக சர்வதமன் டி.பாணர்ஜி நடித்திருந்தார். சிறு வயது கிருஷ்ணராக ஸ்வப்லின் ஜோஷி நடித்திருந்தார். இவர்களுடன் தீபக் டியூல்கர், பிங்கி பக்ரிக் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராம்னாத் சாகர் எழுதி, இயக்கி இருந்தார்

Leave a Reply