சினிமாவில் தொலைத்த தன் வாழ்க்கையை தேடி போராடும்… ‘கனா காணும் காலங்கள்’ இர்பான்…!

வண்ணத்திரைக்கு நிகராக தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது போலவே டிவி நடிகர்களும் மக்களிடம் பிரபலமாக இருப்பதோடு, சிலர் வெள்ளித்திரையில் நுழைந்து பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வகையில், சீரியலில் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவர் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றி பெற நினைத்தவர், தற்போது தனது வாழ்க்கையை தொலைத்து அல்லல் பட்டு கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் விஜய் டிவியை கலக்கிய , ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் இர்பான் தான். கனா காணும் காலங்கள் சீரியலை தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி சினிமா பக்கம் தாவினார். ’பள்ளி பருவங்கள்’, ‘சுண்டாட்டம்’, உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு சினிமா தொடர்ந்து கைகொடுக்காமல், அடுத்தடுத்த பட வாய்ப்பு இன்றி ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார்.

சினிமாவில் தொலைத்த தன் வாழ்க்கையை தேடி போராடும்… ‘கனா காணும் காலங்கள்’ இர்பான்…!

ஒரு கட்டத்தில் தனது சொந்த செலவுக்கே பணம் இல்லாமல் தடுமாறிய இர்பான், ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றியிருக்கிறார். முகத்தை மறைத்துக் கொண்டு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்தவரை, கஷ்ட்டமர் ஒருவர் பார்த்து அடையாளம் தெரிந்துக் கொள்ள, அங்கிருந்து அழுதுக்கொண்டே ஓடி வந்துவிட்டாராம்.

தற்போதும் நடிக்க இர்பானுக்கு பல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை தவிர்த்து வருகிறாராம். அதற்கு காரணம், சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது தான் அவரது வாழ்க்கை குறிக்கோளாக இருந்த்து . அதற்கான படிப்பை முடித்துவிட்டு சில குறும்படங்களை இயக்கியவர், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், வாய்ப்பு தேட அவருக்கு கிடைத்தது நடிகருக்கான வாய்ப்பாம், சரி அதில் கொஞ்சநாள் இருக்கலாம் என்று நினைத்தவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க, இயக்குநர் கனவை நிறுத்தி வைத்துவிட்டு, கதாநாயகனாக நினைத்தவருக்கு அங்கேயும் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது , சீரியலில் கிடைத்த வரவேற்பு கூட அவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லையாம்.

இந்தநிலையில், இனிமேல் இயக்குநராவதே ஒரே குறிக்கோள் என்று பயணிக்கும் இர்பான், தற்போது 6 திரைக்கதைகளை முடித்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறாராம். அதற்கு முன்பு, வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.

Source: டிவி-தொடர்கள்

The post சினிமாவில் தொலைத்த தன் வாழ்க்கையை தேடி போராடும்… ‘கனா காணும் காலங்கள்’ இர்பான்…! appeared first on Vellithirai News.

%d bloggers like this: