Author: Sri Sriram

  • யோக்கியவானாக சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது! ‘விஜய்’க்கு நீதிமன்றம் அளித்த ‘குட்டு’!

    vijay-1 சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நடிகர் ஜோசப் விஜய்க்கு குட்டு கொடுப்பதுபோல் உத்தரவு கொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது. வரி வருமானம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்சிக்கு முதுகெலும்பு; வரி என்பது கட்டாயமாக செலுத்தப்பட வேண்டிய ஒன்று அது நன்கொடை அல்ல! குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய…

  • ஜகா வாங்கிய ‘ஜகா’ குழு: மன்னிப்பு கேட்டது! கடவுளை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லையாம்!

    ஜகா என்ற திரைப்படத்துக்கான போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. அதில், ஹிந்துக் கடவுள் சிவபெருமானை கிண்டல் செய்வது போல், கொரோனா செட்டப்களுடன் போஸ்டர் இருந்தது. இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து இயங்கங்களுக்கிடையே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கெனவே சினிமா துறையினர் ஹிந்துவிரோத காட்சிகளை அமைக்கின்றார்கள் என்ற கருத்தோட்டம் உள்ள நிலையில், இந்த போஸ்டருக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து தமிழர் கட்சி என பல தரப்பினரும் எதிர்த்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.…

  • அதிர்ச்சி: இசையமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை!

    வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள இசை அமைப்பாளர் முரளி சித்தாரா. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்காவு பகுதியில் உள்ள தோப்புமுக்கு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவர் உடலை இறக்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 66. அவருடைய இறுதிச்சடங்கு…

  • மீண்டும் தன் தந்தை குழந்தையாய் கையில்.. சிவகார்த்திகேயன் ட்விட்!

    sivakarthi 1 நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதோடு ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா. இவருடைய மனைவி ஆர்த்தி. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். தனது எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’…

  • கொரோனா: இயக்குநர் மறைவு!

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த இயக்குனர் பி. சேதுராமன் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 64. பல்வேறு மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இவர்,…

  • ‘மக்கள் மன்றம்’ மீண்டும் ‘ரசிகர் மன்றம்’ ஆனது: ரஜினி அறிவிப்பு!

    எம்.ஜி.ஆர். , இருந்த வரை தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற முடியாமல் இருந்து, எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின்னர் அதிமுக., இரண்டாக உடைந்த போது, 89இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஆட்சி கலைக்கப் பட்ட பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாமல் ஜெயலலிதாவிடம் படுதோல்வியைச் சந்தித்த கருணாநிதி, 96இல் மீண்டும் முதல்வர் ஆவதற்காகக் குரல் கொடுத்து திமுக.,வை அரியணையில் ஏற்றியவர் ரஜினிகாந்த். பின்னர் 2006இல் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தயவில் வென்ற திமுக.,வை மைனாரிட்டி ஆட்சி என்று…

  • தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள், பாலியல் மிரட்டல்கள்.. நடிகைப் புகார்!

    முகம் தெரியாத சிலர், பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாகவும் டிவி நடிகை புகார் தெரிவித்துள்ளார் பிரபல வங்கமொழி நடிகை பிரதியுஷா பால். டி.வி.தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் சிலர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். நடிகையின் புகைப்படங்கள் சிலவற்றை மார்பிங் செய்து ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் நடிகை பிரதியுஷா பால் புகார் கொடுத்துள்ளார்.…

  • செம.. கலக்கல்.. பவர்.., வலிமை மோஷன் போஸ்டருக்கு பிரபலங்கள் ட்விட்!

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில நேற்று…

  • இன்று 6 மணிக்கு வலிமை அப்டேட்!

    valimai 1 அஜித் நடித்து வரும் வலிமை திரைபடத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரிடம் வலிமை அப்டேட் என்று கேட்டு வருகின்றார்கள்.700 நாட்கள் கடந்தும்…

  • ரீ எண்ட்ரி கொடுக்கும் சுவாதி!

    தமிழில் சசிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி என்கிற சுவாதி ரெட்டி. குனிந்த தலையும் தெளிந்த பார்வையும் அழகிய மௌன சிரிப்பும் என முதல் படத்திலேயே கிராமத்து பெண் சாயலில் சக்கப்போடு போட்டிருப்பார். அதனை தொடர்ந்து யாக்கை போராளி வடகறி போன்ற படஙகளில் நடித்த சுவாதிக்கு காலம் வெகுவாய் கைகொடுக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் பிண்ணனி பாடகி என பன்முகங்கள் கொண்ட சுவாதி படவாய்ப்பு குறையவே…