
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மூன்று முக்கியமான அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதற்காக அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.
சென்னையில் நடந்து வந்த வலிமை ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. சென்னையில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கடினமான ஸ்டண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த இரண்டு முக்கிய அப்டேட்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்தில் வெளிவர உள்ளது.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்குவில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்எஸ் 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கான அறிவிப்பும் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.