சாய்னா நேவால் டுவிட்டர் பதிவுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த்தின் டுவிட்டர் கணக்கை முடக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் டுவிட்டர் பதிவுக்கு, சர்ச்சைக்குரிய வகையில் பதில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்திருந்த சாய்னா நேவால், இது கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்திருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், சர்ச்சையாகயும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பதில் கருத்து கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக சிர்த்தார்த் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க, மகாராஷ்டிரா டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், உடனடியாக சித்தார்த்தின் டுவிட்டர் கணக்கை முடக்கவும், வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, அவமதிக்கும் உள்நோக்கத்துடன் கருத்துக் கூறவில்லை என நடிகர் சித்தார்த் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில், பஞ்சாப் மாநிலத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மாநில மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகச் சென்றார் பிரதமர் மோடி. காலநிலை சரியாக இல்லாததால், சாலை வழியில் சென்ற பிரதமர் மோடியின் கான்வாயை மறித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, சாய்னா நேவால் டீவ்ட் போட்டு இருந்தார். அதில் அவர், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு வலுவான கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த நடிகர் சித்தார்த், அதை ரீடிவீட் செய்து, அதற்கு படுகேவலமாக இரட்டை அர்த்தம் வரும் வகையில் சித்திரித்து தான் ஒரு ஆபாச நடிகன் தான் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இது, டிவிட்டர் சமூகத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சித்தார்த் பதிவிட்ட டிவீட் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சித்தார்த் பதிவுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா டிஜிபி.,க்கு கடிதம் எழுதியது. அதில், விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில் பெண்களை அவமானபடுத்தும் வகையில் நடிகர் சித்தார்த் பதிவு செய்து இருக்கிறார். இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்துள்ளது. நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுவார். இந்நிலையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறது.
இதை அடுத்து, தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது அளித்த புகார், சமூகத் தளங்களில் வைரலானது. இதுகுறித்து சாய்னா நேவால் வெளியிட்ட கருத்தில், சித்தார்த் எந்த அர்த்தத்தில் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை! அவரை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும்! ஆனால் அவர் தெரிவித்த கருத்து நன்றாகவே இல்லை! சிறந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கலாம்! என்று குறிப்பிட்டுள்ளார்!