அஜித்தின் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் செய்த காரியத்தை டைரக்டர் ஹச்.வினோத் பகிர்ந்துள்ளார்.
இதைக் கேட்டு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அசந்து போய், அவரை பாராட்டி வருகின்றனர்.
ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் வரும் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. வெளியிடப்பட்ட 22 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது.
சென்சார் போர்டின் ஒப்புதல் கிடைத்து விட்டதால், படத்திற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே சமயம் ஒமைக்ரான் பரவலால் ஆர்ஆர்ஆர் பட ரிலீஸ் ஒத்திவைப்பு, தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி போன்றவற்றால் என்ன செய்வதென தெரியாத குழப்ப நிலையிலும் படக்குழு இருந்து வருகிறது.
தற்போது தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ம் தேதி வரை மட்டுமே தொடரும். ஆனால் தற்போது கொரோனா மூன்றாம் அலை துவங்கி விட்டதாக அமைச்சரே கூறி இருப்பதால் 10 ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அப்படி நடந்தாலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் அது படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையில் படம் துவங்கியது முதல் இதுவரை அமைதி காத்து வந்த டைரக்டர் ஹச்.வினோத், தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க வலிமை ஸ்டில்ஸ், படம் பற்றிய ஏதாவது ஒரு தகவலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாக அவற்றை கொண்டாடி வருகின்றனர்.
வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி பாடலையும், செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள அம்மா பாடலையும் டைரக்டர் விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார். இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே அனைவரையும் மிகவும் கவர்ந்து விட்டதால் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்து, ரிலீசிற்கு முன்பே படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கும் இந்த பாடல்களை எழுதியதற்காக சம்பளம் எதுவும் விக்னேஷ் சிவன் வாங்கவில்லையாம்.
கொடுத்த சம்பள தொகை வாங்க அவர் மறுத்து விட்ட தகவலை டைரக்டர் ஹச்.வினோத் தற்போது வெளியிட்டுள்ளார்.
இவ்வளவு அற்புதமான பாடல் வரிகளை எழுதி விட்டு விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்கவில்லை என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.
இது அஜித் மீதான நல்ல மதிப்பு காரணமாகவா அல்லது நட்பு அடிப்படையிலானதா அல்லது அடுத்து அஜித்தை இயக்க விக்னேஷ் சிவன் அடிபோடுகிறாரா என பல விதமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இருந்தாலும் எல்லாவற்றையும் செய்து விட்டு எதுவுமே செய்யாதது போல் அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என பலர் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் மீதமிருக்கும் பாடல் இன்று வெளியாக உள்ளதாக சோனி மியூசிக் அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல் வெளியான நிலையில், இன்று மீதமுள்ள 2 பாடல் வெளியாக உள்ளதாகவும், இதில் ‘மெயின் தீம் மியூசிக்’ இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகின்றது. இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொங்கலையொட்டி வரும் 13-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையரங்கில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படம் தமிழகத்தில் ஆயிரம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
திடீரென ‘வலிமை’ படத்தின் பின்னணி இசையமைப்பாளர் வேறு ஒருவர் என்றும் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது
இயக்குனர் எச். வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்த ஜிப்ரான் தான் வலிமை படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெறும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பாடல்களுக்கு மட்டும் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளாராம். மற்றபடி படத்தின் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசை முழுவதும் ஜிப்ரான் தான் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை பின்னணி இசை அமைக்க வைத்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து படக்குழு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை படத்தின் ட்ராக் லிஸ்டை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது படக்குழு.