[prisna-google-website-translator]

அடையாளம் இல்லாதவர்களுக்கு தான் பட்டம் தேவை: அஜித் பற்றி பயில்வான் ரங்கநாதன் கமெண்ட்!

நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், அடிக்கடி தன் கருத்துக்களை இணையங்களில் பதிவிடுவது உண்டு. அந்த வகையில், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

தோனிக்கு தலன்னு பேரு வெச்சுட்டாங்க. ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் தலன்னு சொல்றாங்க… இன்னொரு பக்கம் தோனி ரசிகர்கள் தலன்னு சொல்றாங்க. சோஷியல் மீடியாவில் இதுவே ஒரு சண்டையாகுது.

போதாக்குறைக்கு சிம்புவை வேற ஒரு குரூப் தலனு சொல்லுது… எதுக்குடா இந்த பிரச்சனைனு அஜித் நெனச்சிருப்பாரு. ஏற்கெனவே எந்த பிரச்சனையும் வேணாம்னு தான், ரசிகர் மன்றத்தையே கலைச்சாரு. அந்த வழியில் தல என்கிற பட்டத்தையும் வேணாம்னு சொல்லிட்டாரு.

முதலில் ரசிகர்கள் மாற்ற சிரமப்படுவாங்க. முதலில் மெட்ராஸ் என்றோம், இப்போ சென்னைனு சொல்லலீயா… பம்பாய்னு சொன்னோம்… இப்போ மும்பைனு சொல்லலையா… கால போக்கில் எல்லாம் மாறிடும். தல என்பதையும் அஜித் ரசிகர்கள் மறப்பாங்க!

தோனியோட தலயும் வேணாம்… சிம்புவோட தலயும் வேணாம்… நாம ‘ஏகே’வாவே இருந்திடலாம்னு நெனச்சிருப்பாரு.

வலிமை படத்தின் விளம்பரத்திற்காக இந்த ஸ்டண்ட் அடிக்கிற ஆள் அஜித் இல்லை. தலன்னு சொல்லாதது ஒரு பப்ளிசிட்டியா? அவர் பப்ளிசிட்டி பார்க்குற ஆள் இல்லை. எந்த நிகழ்ச்சிக்கும் வராத ஆளு அவர்.

அவர் எதுக்கு பப்ளிசிட்டி எதிர்பார்க்க போறாரு. நான் காசு வாங்கிட்டு நடிக்கிறேன். நீ வாங்குன காசை எனக்காக வீணாக்காதே என்று பேசும் ஒரே நடிகர் அவர் தான். மக்கள் நம்பிக்கையை அவர் ஏற்கெனவே வாங்கிட்டார்.

தக்க

இனி அவர் நம்பிக்கை பெற வேண்டிய அவசியமே இல்லை. அவர் ஒரு ஜென்டில்மேன். சினிமாவில் நடிக்கிறார்; நடிக்காத நேரத்தில் குடும்பத்தோட சந்தோஷமா வாழ்றாரு. யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாம இருக்காரு.

தன் வயதுக்கு மீறி ரிஸ்க் எடுக்குறாரு. 15 வருடத்திற்கு முன்னாடியே எங்களிடம் அவர் முதுகை காட்டினார். அவ்வளவு காயம் இருக்கு உடம்புல. விளம்பரம் விரும்பாத ஆளு அவரு.

விளம்பரத்தையே விரும்பாத ஒரே சினிமாக்காரர் அஜித் மட்டும் தான். அவரோட துணிச்சல், கெத்து காட்டுறதெல்லாம் வரவேற்கணும். ஏன் டூப் போட்டு நடிக்க மாட்றீங்க என கேள்வி கேட்ட போது, ‘அஜித் குமாருக்கு மட்டும் இரண்டு கொம்பு இருக்கா? என் உயிர் தங்கம், எனக்கு டூப் போடுறவர் உயிர் தகரமா,’ எனக் கூறியவர்.

இப்போது பட்டங்களை தேடி அழைகிறார்கள். தளபதினு வைக்கிறார்கள், புரட்சி தளபதினு வைக்கிறாங்க. கலைஞர் என்பதை புரட்சிக் கலைஞர்னு வெச்சுக்கிட்டாங்க. எம்.ஜி.ஆர்., மட்டும் தான் டாக்டர் பட்டம் வேண்டாம் என்றார்.

என்னை எம்ஜிஆர் என்றே சொல்லுங்கள் என்று கூறியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய பட்டங்கள் இருந்தன. ஆனால் அவர் எம்ஜிஆர் என்கிற அடையாளத்தை தான் நம்பினார். அடையாளம் இல்லாதவர்களுக்கு தான் பட்டம் தேவைப்பட்டது.

எம்ஜிஆர் தான் எனக்கு பயில்வான் என்ற பட்டம் கொடுத்தார். அவர் கொடுத்த பட்டம் அது. தல அஜித் என்றால் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அஜித் என்றாலே அனைவருக்கும் தெரியும்.

பயில்வான் ரங்கநாதன் என்பதற்கும், தல அஜித் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னை ரங்கநாதன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆனால், அஜித்தை அஜித் என்றாலே அனைவருக்கும் தெரியும்’ என பேசியுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply