
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று குஷ்பு இவ்வாறு பாஜக.,வில் இணைய உள்ளதாக டிவிட்டர் பதிவுகளில் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக ஒரு பதிலளித்தார் குஷ்பு.
இந்நிலையில், தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நாளை குஷ்பு இணைகிறார் என்றும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு தில்லி புறப்பட்டுச் செல்வதாகவும் தகவல்கள் பரவின.
Related
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News