பேஸ்புக், ட்விட்டர் என சமூகத் தளங்களை போதை என வர்ணித்த நடிகை த்ரிஷா, இவற்றுக்கு தற்காலிகமாக விடை சொல்லி, இந்தக் கொரோனா ஊரடங்கு நேரத்தில் முழுக்கு போட்டதற்கு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அழகியாக மிஸ் சென்னை நிலையில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆன திரிஷா இரு பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே கோலோச்சி சாதனை படைத்துவிட்டார்..
அவர், இந்தப் பொது முடக்க காலத்தில், டிஜிட்டல் ஒரு போதை என்று கூறி சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளர். ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரையும் கூறியுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர்.
இந்த பொது முடக்க காலத்தில் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலரும், தங்களது திறமைகளை, எழுத்துகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். எழுத்தாளர்கள் தாங்கள் சந்தித்த பிரபலங்கள் தங்களுடன் பழகியவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுத்து என பலவற்றை சமூக ஊடகங்களில் தினந்தோறும் எழுதி வெளிப்படுத்தி வருகின்றனர்
நடிகர்களும் தங்களது அனுபவங்களை பொழுது போகாமல் ஓரிரு வரிகளில் படங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றனர் நடிகைகள் பலரும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமான போஸ்களில் புகைப்படங்களையும் பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது இருப்பை ரசிகர்கள் உடனான உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளது அவரது தீவிர ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிஷா தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், “ இந்த நேரத்தில் என் மனதிற்கு ஒரு மறதி தேவை. ஆனாலும் டிஜிட்டல் ஒரு போதை… தற்போது இவை வேண்டாம்.
வீட்டிலேயே இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்! இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் இருக்க, த்ரிஷா ஆடிய அழகான ஆட்டம் டிக்டாக்கில் ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் வைரலாகி வருகிறது.