
எம்.ஜி.ஆருக்காகத்தான் ‘சார்பட்டா’வை தவித்தார் சத்யராஜ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து இதயக்கனி இதழாசிரியர் இதயக்கனி எஸ் விஜயன் குறிப்பிட்டபோது…
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்.ஜி.ஆர்., இழிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சை காரணமாக அதற்கு பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். படத்தை ஆதரித்து ஒரு கூட்டம் வேலை செய்கிறது. எதற்கெடுத்தாலும் துடித்து துள்ளும் இயக்குனர் ரஞ்சித் அமைதியாக இருக்கிறார்.

இதற்கு இடையே நமக்கு ஒரு விஷயம் வந்து சேர்ந்திருக்கிறது. நடிகர் திரு. பசுபதி (ரங்கன் வாத்தியார் வேடம்) நடித்த வேடத்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர் திரு .சத்யராஜ். ரஞ்சித்திடம் கதை கேட்ட சத்யராஜ், ரங்கன் வாத்தியார் வேடம் மூலம், தான் பெரிதும் நேசிக்கும் எம்.ஜி.ஆர். பெயரை குறை சொல்ல நேரிடும் என்று ‘நடிக்க விருப்பமில்லை’ என ஒதுங்கி விட்டாராம்.
ஏற்கனவே இதுபோல் மணிரத்தினத்தின் ‘இருவர்’ படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர் சத்யராஜ். அது எம்.ஜி.ஆருக்கு எதிரான வேடம் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டார்.. என்கிறார்.
Related
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News