Connect with us

கிசுகிசு

‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!

Published

on

800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை  மேற்கோள் காட்டி நன்றி… வணக்கம்… என விஜய்சேதுபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இலங்கையைச் சேர்ந்த தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, “800” என்ற படம் திட்டமிடப் பட்டது. இந்த படத்தில் முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதி, தமிழர் அமைப்புகள் சில மூலம் அவருக்குக் கொடுக்கப் பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அவர் வேண்டுமானால் விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் உடனான இலங்கை ராணுவத்தினரின் போரில் அரசுக்கு ஆதரவாக இருந்ததாகவும், அவர் தமிழ் இன வெறுப்பாளர் என்றும் கூறி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என தமிழகத்தில் சிலர் கடந்த இரு வாரங்களாக கருத்துகள் தெரிவித்து வந்தனர்.  

இந்த விவகாரத்தில் தாம் தமிழ் இன வெறுப்பாளர் இல்லை என்று கூறி சர்ச்சைகளுக்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில், முத்தையா முரளிதரன் கடந்த வாரம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். 

800 e0aeaae0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb2e0ae95e0aeb2

எனினும், இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி  பதில் ஏதும்  அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் 800 படத்தில் நடிப்பது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயகுமார் உள்ளிட்டோரும்  கருத்துகளைத் தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்தது. 

இந்நிலையில், முத்தையா முரளிதரன் தரப்பில் அவரது கையெழுத்திட்ட ஒரு பக்க அறிக்கை இன்று வெளியானது. அதில் தனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.  

மேலும், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர்  கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்.

“ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒரு போதும் நான் சோர்ந்து விடவில்லை. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். 

“அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”  என குறிப்பிட்டுள்ளார். 

இந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று கூறி வேறு எதுவும் தெரிவிக்காமல் விட்டுவிட்டார். இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

nineteen + eight =

லேட்டஸ்ட்

e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0ae9fe0aebfe0aeaae0af8de0aeaae0aebee0ae9ae0af88e0ae95e0af8d e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0ae9fe0aebfe0aeaae0af8de0aeaae0aebee0ae9ae0af88e0ae95e0af8d
செய்திகள்7 மணி நேரங்கள் ago

பெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்!

deniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...

e0aeaee0af81e0ae95 e0ae9ae0aebfe0ae95e0aebfe0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af8be0aea9 e0aeaae0aebfe0ae95 e0aeaee0af81e0ae95 e0ae9ae0aebfe0ae95e0aebfe0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af8be0aea9 e0aeaae0aebfe0ae95
செய்திகள்1 நாள் ago

முக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை! நேர்ந்த விபரீதம்!

Source: Dhinasari News – Vellithirai News

e0ae95e0aebee0aeb5e0aeb2e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0aeaee0aeb0e0aebfe0aeafe0aebee0aea4e0af88e0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0aeb5 e0ae95e0aebee0aeb5e0aeb2e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0aeaee0aeb0e0aebfe0aeafe0aebee0aea4e0af88e0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0aeb5
செய்திகள்2 நாட்கள் ago

காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

IMG 20210417 WA0007 நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி...

e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aeaee0aebee0aea4e0aebfe0aeb0e0aebf e0aeafe0aebee0aeb0e0af81e0aeaee0af8d e0ae9ae0af86e0aeaf e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aeaee0aebee0aea4e0aebfe0aeb0e0aebf e0aeafe0aebee0aeb0e0af81e0aeaee0af8d e0ae9ae0af86e0aeaf
செய்திகள்2 நாட்கள் ago

விவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு!

kumari muthu தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி...

e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0af81e0ae95e0aeb3e0af8d 82e0ae87e0aeb2e0af8d e0aeaee0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0af81e0ae95e0aeb3e0af8d 82e0ae87e0aeb2e0af8d e0aeaee0aea4e0af81
செய்திகள்2 நாட்கள் ago

விவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்!

vivek in telephone operator n madurai1 டெலிபோன் ஆபரேட்டர் பணிக்காக 1982-83இல் மதுரையில் பயிற்சி பெற்ற போது, வகுப்பில் உள்ளவர்களுடன் நடிகர் விவேக் எடுத்துக் கொண்ட...

Advertisement