[prisna-google-website-translator]

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

தனுஷின் எந்தப் படங்களும் செய்யாத சாதனையை அசுரன் செய்துள்ளதாம்! பிகிலு காட்டுறாங்க அசுரன் படக்குழு!

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த, அசுரன் படத்தில் தனுஷ் வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார்.

திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினை உசுப்பேத்திவிட்டு, உங்க படத்தைப் பாக்க வந்து ஒரு கருத்து சொன்னதுக்கு என்னை தூங்க விடாம செய்யிறீங்களேடா என்று மைண்ட் வாய்ஸ் கொடுக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்ட படம் அசுரன்.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு குறித்து குரல் கொடுத்த அசுரன் படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், தனியாக அமர்ந்து படம் பார்த்து ஒரு போட்டோவையும் பதிவிட்டார். அதுவே அவரை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கிய்து. இதில் வேறு, படத்தைப் பற்றி ஆஹா…ஓஹோ என புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, அதற்கு பதிலடி கொடுக்க களத்தில் இறங்கிய பாமக., ராமதாஸ், முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலத்தில் தான்! எனவே அதை ஸ்டாலின் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்று நம்புவோம் என திரியைக் கிள்ளிப் போட்டு தீபாவளிப் பட்டாசைக் கொளுத்தினார்.

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

இதை அடுத்து பாமக., திமுக., என சண்டை மாறியது. முரசொலி கட்டடம் உள்ள நிலத்தின் பத்திரத்தை டுவிட்டரில் பதிவிட்டு, அது பஞ்சமி நிலம் தான் என்பதை முடிந்தால் ராமதாஸ் நிரூபிக்கட்டும் என சவால் விட்டார். ஆனால் அதன் தாய்ப் பத்திரத்தை காட்டும் படி ராமதாஸ் பதிலுக்கு சொன்னார்.

இப்போது பாஜக.,வின் பேராசிரியர் சீனிவாசன் தயவில், தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப, தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

இந்தக் களேபரங்களுக்கு இடையில், சத்தமே இல்லாமல் “அசுரன்” திரைப்படம் ஒரு சாதனை புரிந்துள்ளது. தனுஷின் எந்தப் படங்களும் இதுவரை 100 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத நிலையில், அசுரன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்!

அக்டோபர் 4ம் தேதி வெளியான அசுரன் படம், முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்போது அதன் ஒட்டு மொத்த வசூல் ரூ.150 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. இதை அடுத்து, #AsuranJoins150CrClub என்ற ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply