கேஜிஎஃப் 2 க்ளைமேக்ஸ் புகைப்படத்தை லீக் செய்த இயக்குனர்…

kgf
kgf
5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது.
கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப் 2ம் பாகத்திலும் க்ளைமேக்ஸ் காட்சி எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பான ஷூட்டிங் புகைப்படத்தை இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ராக்கி, ஆதீரா ஆகியோருக்கு இடையே சண்டை, எனவும், மரண மாஸ் சண்டை காட்சியை சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply