நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநாடு தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அதிகமாக தாடி வளர்ந்திருந்த போது போட்டோஷூட் செய்யப்பட்ட சில புகைப்படங்களை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.
An untold story #Atman #SilambarasanTR pic.twitter.com/xgPd1xjhOp
— Silambarasan TR (@SilambarasanTR_) December 7, 2020