[prisna-google-website-translator]

குடித்துவிட்டு தகராறு செய்யும் ஹேமந்த் – விசாரணையில் திடுக் செய்தி

chitra

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன் நடித்தவர்கள், தோழிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாய் ‘ என் மகளின் மரணத்திற்கு ஹேமந்தே காரணம், அவன்தான் என் மகளை கொன்று விட்டான். என் மகள் கோழை அல்ல. தனியாக எங்கு செல்வாள். தனியாக கார் ஓட்டி செல்வாள். அவளை தைரியமாக வளர்த்தேன். அவனை சும்மா விடக்கூடாது’ என கதறி அழுதார்.

இந்நிலையில், குடிப்பழக்கம் உள்ள ஹேமந்த் சித்ரா படப்பிடிப்பில் இருக்கும் போது அங்கு சென்று அவரிடம் தகராறு செய்தது தெரியவந்துள்ளது. மேலும், பல வகைகளில் அவர் சித்ராவுக்கு மன அழுத்தம் கொடுத்துள்ளார். எனவே, அவரை விட்டுவிட்டு வந்துவிடும் படி சித்ராவின் தாய் சித்ராவுக்கு மன அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply