ஜனவரியில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. தயாராகும் கமல்ஹாசன்…

indian2

லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. இப்படம் துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பண விவகாரம், படப்பிடிப்புல் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணம் என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது வரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. எனவே, இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாம். மார்ச் மாதத்திற்கு பின் தேர்தல் பணிகள் இருக்கும் என்பதால் ஒரே வேகத்தில் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × two =