புதிய ஆந்தாலஜி திரைப்படம் – சூர்யாவுக்கு யார் ஜோடி தெரியுமா?..

suriya

suriya

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை 9 பகுதிகளாக பிரித்து கவுதம் மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பொன்ராம், கார்த்திக் சுப்பாராஜ் என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் குறும்படம் தொடர்பான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானனது. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குறும்படத்தில் சூர்யா மீசையில்லாமல், வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

prayaga

மேலும், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் பிரயாகா மார்டின் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply