பல வருடங்களுக்கு பின் பிரசாந்துடன் மீண்டும் ஜோடி போடும் சிம்ரன்….

simran

simran

ஹிந்தியில் ஹிட் அடித்த அந்தாதூண் திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த் நடிக்க அவரின் தந்தை தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை முதலில் இயக்குனர் ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால், அதன்பின் அவருக்கு பதில் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே. ப்ரெட்ரிக் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

andhadhun

இந்நிலையில், இப்படத்தில் சிம்ரன் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிரசாந்துடன் ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், தமிழ், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் அவருடன் ஜோடி போட்டு நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply