முல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு

chitra

chitra

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம் வலம் வந்தது. ஏனெனில், முல்லை கதாபாத்திரத்தில் அந்த அளவுக்கு சித்ரா நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தற்போது அவர் இறந்துவிட்டதால் அவருக்கு பதில் யார் அதில் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும், சின்னத்திரை நடிகை சரண்யா அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

saranya

இந்நிலையில், இந்த தகவலை சரண்யா மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘முல்லை கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக உலா வரும் செய்தியில் உண்மை இல்லை. அவருக்கு மாற்றாக என்னை நான் கருதவில்லை. தனது திறமையான நடிப்பால் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்துள்ளார். அது அப்படியே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply