விஜயை இயக்கும் நெல்சனுக்கு இத்தனை கோடி சம்பளமா? – காண்டான இயக்குனர்கள்

nelson

nelson

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மாஸ்டருக்கு பின் விஜய் நடிக்கவிருந்த புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் கூறிய கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சனை விஜய் தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், இப்படத்திற்காக நெல்சனுக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply