அருவா கதையில்தான் அருண் விஜய் நடிக்கிறாரா? – ஹரி டீம் விளக்கம்

arun vijay

arun vijay

தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க ஹரியின் மச்சான் மற்றும் நடிகர் அருண்விஜயை வைத்து அதே கதையை ஹரி இயக்குவதாக செய்தி வெளியானது. ஆனால், அது உறுதிசெய்யப்படவில்லை. மேலும், விக்ரமை வைத்து ஹரி ஒரு புதியபடத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஹரி தனது மச்சான் அருண் விஜயுடன் இணைவது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடெக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கவுள்ளார். இப்படம் இதுவரை வெளியான அருண் விஜய் படங்களை விட அதிக செலவில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, அருவா கதையில்தான் அருண்விஜய் நடிக்கிறார் எனப்பேசப்பட்டது. ஆனால், இந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது. அருவா கதை வேறு. அருண்விஜய் நடிக்கவுள்ள கதை வேறு. காமெடி மற்றும் ஆக்‌ஷன் செண்டிமெண்ட் கலந்த கதையாக இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply