மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்

siranjeevi

siranjeevi

தமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது இருந்த இமேஜை மாற்றியது. தனி ஒருவன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடித்திருந்தார்.

தற்போது சிரஞ்சீவியையே இயக்கவுள்ளார் மோகன் ராஜா. மலையாளத்தில் நடிகர் பிருத்திவிராஜ் இயக்கத்தில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்கிறார் சிரஞ்சீவி. லூசிபர் படத்தில் மோகன்லால் ஏற்ற வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இப்படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். இப்படம் ஒரு அரசியல் திரில்லர் கதை என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply